தோழி காதல்
புதிரனா புன்னகையில்
புதிய தேசம்
காண்பித்தவன்...
நடன காற்றில்
காதலால் மிதக்க
செய்தவன்...
நாணம் காண
நாட்கள் எண்ணி
மணவாழ்விற்கு மங்களம்
தேடியவள்...
தோழி காதல் தொந்தரவு
தூதான துணையில்
தோல்வி அடைந்தேன்
ஒலிவு மறைவு காதலில்..
அடித்த அடியில்
அத்துனை காதல்
மறந்தேன்
அடுத்த நொடியில்..
அப்பூர்வம் அணைத்தேன்
சரீரம் மறந்தேன்!
மாங்கள்யம் தந்து
மங்கையோடு நிற்க
இல்லறம் பேசி
இன்பம் தருவேன்...
உறுதியளித்த உன்னை
உயிர் பிரிந்து மறவேன்
உயிர் துடிக்கும் வரை
காதலிப்பேன் கணவா...!

