சமூக மாற்றம்

சமூக மாற்றம் தலைப்பு என்னவோ யோசித்துவிட்டேன்!. ஆனால் எந்த ஒரு மைய கருத்தை எடுத்துக்கொள்வது?. அத்துணை குறைகள் உள்ளதே நாம் தான் சரி செய்ய வேண்டும் ஏனெனில் சமூகம் நான், நாம் சேர்ந்ததுதானே!
வாழ்வே வசப்பட பாடுபடு! என் முன்னோர் சொன்ன வார்த்தைகள். ஆனால் இன்றைய சமூகம் அதாவது நாம் பாடுபட முயல்வது இல்லை. எளிய முறையில் எது கிடைக்கும் என்று தேடித்தேடித் திரிகிறோம். மனிதம் தொலைத்தோம், மனம் தொலைத்தோம், பணம் மட்டும் செய்தோம்!. பெண்களை இழிவு படுத்தும் பாடலை ரசித்தோம். செத்து மடியும் பெண்ணை பார்த்து அழுதோம்! அங்கொன்றும் இங்கொன்றும் பெண் கொலைகள் என் செய்ய என் தேசம் பெண்ணியம் மறந்ததோ? என்று வேதனைக்கொள்ள செய்கிறது.
இதற்க்கு மேலாக உள்ளது சோற்றால் வயிறு நிரப்பும் விவசாயின் நிலைமை, நீர் இன்றி அமையா உலகு! வள்ளுவன் வாய் மொழி! ஆனால் இங்கு நீர் இன்றி அமையா அரசியல் என்றானது. போர்க்கொடி பல ஏந்தியும் அரசியல் செய்கிறது நாடாளும் ஆசையில். வேதனை தீர்ந்தபாடில்லை!. இனி எழுதுங்கள் விவசாயம் இல்லையேல் எதுவும் இல்லை என்று. கோடிகளில் புரண்டாலும் விளைநிலம் இல்லயேல் நீயும் தெருக்கோடிதான்!. அன்றிலிருந்து இன்று வரை விவசாயி நிலை ஒன்றே! அனைவருக்கும் தேவை உணவு ஆனால் அதை விளைவிக்கும் விவசாயி இன்றும் ஏழை! நியமாக அவர்கள்தானே பெரும் கோடீஸ்வர்களாக இருக்க வேண்டும் ஏன் இல்லை??.
நாடாளும் ஆசை இருக்கும் மனங்களுக்கு விளை நில சேற்றில் இறங்கி விதைத்திட ஆசை இல்லை! பாவம் என் தேசத்தில் விவசாயம்!. இது ஒரு புறம் இருக்க விவசாயி மேல் ஏளன பார்வை வயதுகள் மதிக்கபடுவது இல்லை, விவசாயி என்றால் அடிக்கிறது சமூகம். கேள் செவிடாக இருக்கும் சமூகமே விவசாயம் வேண்டும் நாம் ஆரோக்கியமா வாழ!
நீ ஆணாக இருந்தால் பெண்ணியம் போற்று! பெண்ணாக இருந்தால் ஆண்ணியம் போற்று! ஆணின் திமிரும், வீரமும் பெண்ணிடம் காட்டாதே. பெண் என்பதால் அனுதாபம், கர்வம் ஆணிடம் காட்டாதே! ஆணே ஆணிடம் பிற பெண்ணை கேளிக்கை ஆக்காதே. பெண்ணே பெண்ணிடம் குறைகள் காணாதே! ஒவ்வொருவரும் இந்த பூமியில் வாழ பிறந்தவர்களே!. நீ பெண்ணோ! ஆணோ! பேதம் கொள்ளாதே மனதளவில் மாற்றம் கொள். பெண்ணின் வலி புரிந்து கொள். வீதிகளில் சகோதர,உறவுகளைத் தேடு! முதலில் நாம் மாறுவோம் பின் சமூகம் மாறும்!. நடிப்புகளின் பின்னாள் செல்லாதே உன்னுள் தலைமை தேடு! சிறக்கட்டும் இந்த சமூகம்