செல்லாக்காசு
நன்றாக மிடுக்கான தோற்றத்தோடு இருந்தான் அவன் கையில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் தாளை வைத்துக்கொண்டு யோசனையில் இருந்தான்
"ம்..ம்..யாருகிட்ட வாங்னோம் இத நியாபகமே வரலையே எப்படி இத மாத்தறது.." சிந்தித்து கொண்டே எதிரில் இருந்த பெட்டிகடையை நோக்கினான் அங்கே கடையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்;
"இந்த பெருசுகிட்ட குடுத்து மாத்திர வேண்டியதுதான்..." நேராக கடையை நோக்கிச் சென்றான்;
"பெருசு சிகரெட் இருக்கா?"
"இருக்கு தம்பி உனக்கு எது வேணும்"
"Gold flake ஒன்னு குடு"
"பத்து ரூபா சில்ர வேணும்"
"தரன்யா குடு"
வாங்கி பற்றவைத்து இரசித்து இரசித்து பிடித்து முடித்தான் அவன்...
"இந்தா பெருசு காசு .."
அதை வாங்கி நன்றாக உற்றுப்பார்த்தார் முதியவர்;
"தம்பி இது செல்லாது பா வேர நோட்டு குடு"
"என்னாது செல்லாதா எங்க குடு பாப்போம்.." கையில் வாங்கியவன் அப்போது தான் பார்த்ததைபோல
"ஆமா தாத்தா லேசா கிழிஞ்சிருக்கு நான் கவனிக்கல.."என்றான்..
"வேற காசு குடு தம்பி அது செல்லாது" என கூறினார் முதியவர்..
"எங்கிட்ட வேர சில்ர இல்ல தாத்தா எல்லாம் இரண்டாயிரமா இருக்கு வேணுனா சில்ர தறியா..?"
"தரன்பா குடு என்ன பன்றது"
என நோந்து கொண்டே அவன் குடுத்த இரண்டாயிரம் ரூபாய்க்கும் சில்லறை கொடுத்தார் முதியவர் அதோடு மேலும் பல இரண்டாயிரம் தாள்களையும் சேர்த்து தன் சட்டைபையில் அவன் சொருகிய நேரம் ஒரு கண் தெரியாத பிச்சைக்காரன் அவனிடம் யாசகம் கேட்டார் அவனோ தாராள பிரபுவாக தன்னை எண்ணிக்கொண்டு அந்த கிழிந்த பத்து ரூபாயை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
இதை கவனித்த பெட்டிக்கடை முதியவரோ அந்த கிழிந்த நோட்டு செல்லாத காசு இல்லை அவன் தன் பையில் வைத்திருக்கும் இரண்டாயிரம் காசுகள்தான் செல்லாக்காசுயென எண்ணிக்கொண்டு ஒரு நல்ல ஐம்பது ரூபாய் தாளை அந்த பார்வையற்றவருக்கு கொடுத்து அனுப்பினார்.
காசுகள் மட்டும் அல்ல சில நேரங்களில் மனங்களும் செல்லுவதில்லை...