மௌனம் பேசியது
அவளை
கடந்துப்போகும்
நொடியில்
என் ஐம்புலனும்
மயங்க கண்டேன்...
அவள் கண்கள்
பார்த்து நின்றேன்
என் உயிரை
அள்ளிச்சென்றாள்
அவள் உறவை
நாடிச்சென்றேன்
என் இரவை
இறவல் கேட்டாள்
அவள் நெஞ்சில்
ஒலிந்துக்கொண்டேன்
என் உயிரில்
கலந்துக்கொண்டாள்
அவளின் அடர்ந்த
கூந்தலில்
என் இரவை
பதுக்கிவைத்தேன்
அவள் மடிக்கு
ஏங்கிய என் மனதை
துடிக்க வைத்து
துதிக்க வைத்தாள்
என் தனிமைக்கு
துணையாக
அவளின் நினைவை
அனுப்பி வைத்தாள்
அவள் நினைவும்
என் நினைவும்
உரசிக்கொண்டு
பூக்கள் பூத்தன..