அண்ணா நினைவு நாள்
குள்ளமான உருவம். ஆனாலும் அண்ணாவை அண்ணாந்த்து மட்டுமே பார்க்க முடிகிறது.
ஆம் அவரால் தொட முடித்த சில உயரங்க்களை இன்று வரை இன்னோருவரால் நெருங்க முடியவில்லை..
ஆம் பல தலைவர்களின் தலைவிதியை, அரசியல் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசியலின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அண்ணா மட்டுமே!
மக்களை விட்டு விலகி நிற்காமல், அவர்களோடு தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் செய்த முதல் தலைவர் அண்ணா மட்டுமே
அதனால்தான் அவருக்கு லட்சக்கணக்கான தம்பிகள் வேறு யாருக்கும்மில்லாத பலம் இது யாராலும் நினைத்துக்கூட்டப் பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக அவர் திகழ்த்தார்.
அண்ணாவின் வாழ்க்கையை ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையாக மட்டும் பார்க்காமல்,
#எவ்விதப் பின்னணியும் இன்றி அரசியலுக்குள் நுழைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞர், தம் கனவுகளை எப்படி படிப்படியாக நனவாக்கி வெற்றி கண்டார் என்கிற கோணத்தில் பார்த்தால், ஏராளமான வெற்றி ஃபார்முலாக்கள் அகப்படும்.
ஆளும்கட்சியாக இருத்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருத்தாலும் சரி. அண்ணாவின் பெயரைச் சொல்லாமல் எந்தவொரு சத்தியாலும் இன்று அரசியல் செய்ய முடியாது.......
அண்ணாவின் நிறைவுநாளன்று எனது வணக்கத்துடன் நினைவு கூர்கிறேன்.
டி.ஆர்.அய்யப்பன்