மூன்றாவது நாள்
மூன்றாவது நாள்
நடுஇரவில் விழித்துவிட்டேன்
அருகில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறாள்
படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம்
மின்விசிறிக் காற்றில் பறக்கிறது
அவளின் காதோர முடிகளும்
கலைந்து போன மேலாடையும்
மனதினுள் ஓர் மௌன யுத்தம்
இன்று மட்டும் அவளை
எழுப்ப வேண்டாம்
இன்றோடு முடிகிறது மூன்றாவது நாள்.