தென்றல் என் காதலன்

தென்றல் என் காதலன்
நித்தம் வருவான்
இதழ் தொட்டு முத்தம் தருவான்
மலர் நான் அவன் காதலி
அவன் மார்பினில் சாய்ந்து மகிழ்ந்திருப்பேன்
கவின் மாலையிலும் கதிர் விரி காலையிலும்
காதல் புரிந்து நாங்கள் வாழுகிறோம்
தினம் இந்த பூமியில் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-18, 12:08 pm)
பார்வை : 117

மேலே