லஞ்சம்

வஞ்சம் கலந்த
மனிதன்நெஞ்சம் குலைய
உருவாக்கியதுஇது
லஞ்சமா?எது லஞ்சம்?
யார் சொன்னது? என்று
தரம் பிரிக்க முடியாதவாறு
உடல் உறுப்பாய் கலந்தது


அன்பாய் பிறந்தது
பரிசாய் வளர்ந்தது
பக்குவமாய் வளர்ந்தது
பாவிகளை உருவாக்கியது
பல தந்தது...{மரணத்தைக் கூட}


பல கையென தளிர்த்து
நேர்மையை
நிறம்மாறச் செய்தது
ஊழலாய் அவதாரம் எடுத்தது
உலகை வெல்ல புறப்பட்டது
உலகம் வெள்ளமானது...................


மனித நேயத்தை
மானுட சகோதரத்தை
மட்டில்லா உண்மையை
உருகுலைக்க வந்தலஞ்சமே-நீ
உலகை அழிக்க வந்த வைரஸ்...



உன்னை இகழ
தமிழில் கூட
வார்த்தைகள் இல்லையே...

எழுதியவர் : பிரசன்னா (7-Aug-11, 11:26 am)
சேர்த்தது : dukeprasanna
Tanglish : lancham
பார்வை : 298

மேலே