உறவு தேடும் இதயம்
ஆகாயம்
எனக்காக
அழுகின்றது....
என் சந்தோஷம்
மெய்யென்று
யார் சொன்னது....
கண்களிலே நீர்த்துளிகள்....
எழுதிடுதே கவிவரிகள்....
காற்றைப்போல என் நேசம்...
கரைந்தே வருதே உன் சுவாசம்....
நீ இருந்த நாட்களெல்லாம்
நெஞ்சின் ஓரம் பூக்கோலம்....
நீ பிரிந்த நொடி முதல்
நேரம், நிமிடம் யாவும் போர்க்களம்...
மீண்டு்ம் நீ வரும்வரை
மீண்டு நான் வாழ்வேனோ...
பிரிவு கொண்ட காலம் போதும்...
பிரிவை கொன்று வந்துவிடு...
மனம் பட்ட காயத்திற்க்கெல்லாம்...
மருந்தாய் மகிழ்ச்சியை தந்துவிடு....