எனது அன்பே
எனது அன்பே
எல்லாம் நீ தானே
உன்னோடு வாழ தானே இத்தனை போராட்டம்
இங்கு உள்ள ஒவ்வொரு பொருளும் நமது தூய அன்பை கூறும்
பூக்களே வாடினாலும் நமது உண்மையான அழகான அன்பு வாடாதே
கண்களில் சொன்ன காதல் இன்று உள்ளங்களின் நடுவே பூட்டி இருக்கின்றதே
எல்லாம் என்ன மயத்திலோ
வாழ்ந்தால் உன்னோடு
மரணம் கேட்க மாட்டேன்
மரணித்தால் உன்னோடு வாழ இயலாதே
உன்னோடு வாழ வேண்டும்
உன் கரங்கள் பற்றி இவுலகை சுற்ற வேண்டும்
உன் தோளில் சாய்ந்து இவுலகை மறக்க வேண்டும்
உன்னோடு சண்டை போட வேண்டும்
கோபிக்க வேண்டும் மீண்டும் கண்களில் பேச வேண்டும்
எல்லாம் உன்னோடு
என் வாழ்வும் உனக்காக
வாழ வேண்டும் என்னவனே
எனது அன்பே
எங்கு தான் போனாயோ