மழை

உன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் வானில் இருந்து வையகத்துக்கு வந்த தேவதை நீ!

மண் கூட மணம் வீசும் உனை சந்திக்கும் வேளையில்!

மயிலும் நடனம் புரியும் உன் வருகை அறிந்து!
குட்டித்தவளை கூட துள்ளி குதிக்கும் சந்தோஷத்தில்!

புவி மொத்தமும் புதிதாய் இரத்தம் பாய்ச்சியது போல சிலிர்க்கும்!

பச்சை கம்பளம் விரித்தது போல பார்க்கும் திசை எங்கும் பசுமையை படர செய்கிறாய்!

மக்களிள் மனம் எங்கும் மகிழ்ச்சியை அள்ளி தெளிக்கிறாய்!

இத்தனை அற்புதம் புரியும் இயற்கையே நீயே
எங்களின் அன்னை!

எழுதியவர் : சுதாவி (14-Mar-18, 3:43 pm)
Tanglish : mazhai
பார்வை : 79

மேலே