இரவு காதலி

திடீரென கனவாய்
என் தூக்கத்தில்
விழித்தாய்
என் கண்ணத்தில்
கை வைத்து
கண்களுக்குள்
படர்ந்தாய்
வருடங்கள் கழிந்தும்
அந்த முதல்
பார்வை
அழியவில்லை
புருவங்கள் துடிக்குதடி
இரு கண்ணில்
நீர்மட்டம்
உயருதடி
இறுக்கி அணைத்துக்கொண்டேன்
காதலில் கசியும்
நறுமணம்
அறிந்திட்டேன்
எத்தனை பெண்களை
தினமும் கடக்கிறேன்
நீ
தெரிவதில்லை
போதும் இந்தநொடி
மரணத்தையும் ஏற்கிறேன்
வாழ்க்கை
வாழ்ந்துவிட்டேன்
இப்படி தினமும்
நான் காதலிக்கிறேன்
ரகசியமாய்
இரவில் மட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
