உன்னை சேலையில் காண
அன்பே
நினைவுகள் அதிகம் நிறைந்த
கனவில் ஒருநாள்
வண்ணங்கள் ஒன்று கலந்த
வண்ணமயில் நிற சேலையில்
நீ தோன்றினாய்- கனவுதானே என்று
கைகழுவி விட எனக்கு மனமில்லை!
மூளையில்லா
என் முழு உருவத்தில்
முழுவதுமாக அக்கனவில்
மூழ்கி இருந்தேன்!
நீந்தி வர முடியாது என்பது
நிரந்தரமான பின்பு
நிதானமாக உண்மையை கேட்டு
நின்றேன்!!
நிற்கும் சிலையே "நீ"
சேலை அணிவாயா? என்று!
நிமிர்ந்த ஒரு பார்வையால்
நெருப்பாக முடியாது என்றா(ள்)ய்
நெஞ்சம் அடம்பிடித்தது!!
நெருங்கும் காலங்களில்
கனவுகள் மெய்படுமா? என
காதோரம் கேட்டேன்
காத்திருக்க வேண்டுமென்றா(ள்)ய்
பத்து திங்கள் காத்திருந்தேன்
பாவம் பார்த்து
ஒருநாள் வருகிறேன் என்றுரைத்தா(ள்)ய்
பாவிமகன் அன்றுதான்
பார்க்க தவறினேன்! மறுமுரை
பாவம் பார்த்து
பார்வையில் தென்பட்டா(ள்)ய்!!
"பூந்தோட்டத்தை பூவோடு"
வைத்தது யார்? என்று
புதிதாக ஒரு பூரிப்பு
தோன்றியது- புலமை படைத்த
புத்திக்கு அப்போதுதான் புரிந்தது!
இருப்பது பூந்தோட்டத்து பூவல்ல
என் இதய தோட்டத்து பூவென்று!!
இயங்காமல் இன்னும் பார்க்க
ஆசையாக இருந்தது- இருந்தும்
நிகழ் காலத்தில் பல நிகழ்வுகள்
நடக்க இருந்தது!!
சுற்றி இருப்பவர்கள்
எல்லாரிடமும்
என்னவள் என்னவள்
என்று சொல்ல எண்ணம் இருந்தது!
அப்போதும் சில சூழ்நிலைகள்
சூழாமல் இருந்தது!!
எனக்கான கால்கள்
எதற்கோ உன்(அவள்) பின்னால்
அலைந்தது- அலைவது
ஆண்மகனுக்கு புதிதில்லை!
ஆனால் என் ஆன்மாவிற்கு புதிது
எதற்காக இம்மாற்றமென்றது!!
எல்லாம் உயிருக்கென்று
எடுத்துரைத்தேன்!!
காத்திருக்கா
காலம் நேரங்கள் - கறையும்
நேரம் வந்தது!
சாயும் காலம் அங்கே
சாயம் இழக்கத் தொடங்கியது!!
இல்லம் அழைக்கின்றதென்று
இப்போதே செல்கிறேன் என்றா(ள்)ய்!!
அதற்குமுன் இரவுகள் எல்லாம்
இந்நாள் என்னை எல்லையில்லா
சில யுகங்களுக்கு செல்ல வைத்தது!
இந்த இன்பமொன்று போதுமே
இறந்து போகும்
மனம் பெற்றேனே என
மகிழ்ச்சி நிறைந்தது!!
மறுநாள் மீண்டும் பார்த்தேன்
நேற்று இரு(ற)ந்த காலம்
இனி எதிர்காலமாக வருமா? என
எதிர் நின்று கேட்டேன்!
ஆசைகள் இன்னும்
தீரவில்லையா என்றா(ள்)ய்!
"திங்கள் ஒளியினை பார்த்து"
திகைத்து விட்டதென்று
திசைகள் சொல்லுமா என்ன?
தீரவில்லையென்றேன்!!
அதற்குள்
வாழ்க்கை சக்கரம்
வரையறையின்றி சுற்றியது!
சூழ்நிலைகளில் தரத்தால்
தரையில் தண்ணீராக நான்
கீழ் இறங்கினேன்!
தாரகையாக தலைக்கு மேல்
சென்றா(ள்)ய்
தரையில் இருந்து நான்
தலை நிமிர்ந்து பார்க்கவே
அனுமதி தர மறுத்தா(ள்)ய்!
ஆசைகள் இன்னும் தீரவில்லை
அந்நாள் நினைவோடு
அனுதினமும் வருவாயா? என்றேன்!
ஆசையானது உன்னுடையதென்றால்
அறிவிழந்த போதும்
அச்செயலை மீண்டும்
செய்ய மாட்டேன் என்றா(ள்)ய்!!
காத்திருப்பு என்பது
காளையர்களுக்கே சொந்தமான ஒன்று
மீண்டும் காத்திருக்கத் தொடங்கினேன்!
கறையேறும் நாட்கள்
நெருங்கி வந்தது! கைகளுக்கு எட்டாத
கடலலையாக காலத்தின் கணக்கில்
கழிந்து விட்டா(ள்)ய்!!
வாழ்க்கை சக்கரம்
மீண்டும் சுற்றியது
தரையில் தண்ணீராக இருந்தவன்
நீராவியாகி வானில்
நீந்தச் சென்றேன்!
தாரகையாக இருந்தவள்
தரையில் தவழ்ந்து செல்ல
கட்டாயம் வந்தது!!
தலைநிமிர்ந்து பார்க்கும்
தடைகள் தகர்த்தெறிந்து
தலைகுணிந்து பார்க்கத் தொடங்கினேன்!
சித்திரமாக தென்படும்
சில நேரங்களில்
சில்லென்று மழைதுளிகள்
மனதின் மேலே படத்தொடங்கியது!
தீயாக திரும்பி பார்க்கும்
சில நேரங்களில்
திரவியமாக உருகி விழுந்தேன்!
மாராப்பு சூட்டும் மலரை
மறக்க முடியாமல்
மறைந்துப் பார்க்கத் தொடங்கினேன்!
இதயமருகே உள்ள இவளை
காணவேண்டுமென்று
இமைகளை கிழித்தெரிந்து
விழிகள் விரைந்து கொண்டு
வீதி வந்தது!
வெள்ளி நிலவு அவள்
விடுமுறையெடுத்துக் கொள்வாளென்று!
விடுமுறை தானேயென
விட்டுக் கொடுக்க மனமில்லை
விதி முறைகளை மீறி வர
விளிம்புகளுக்கு தெரியவில்லை!
பின்புற அழகில் தான்
பட்டுப் பூச்சிகள்
பின்னிப் பினையும் அழகினை
கண்டேன்- அதில்
மொத்த பூச்சியும்
மொட்டு விட்ட பூக்களாக
முழுவதுமாக சூழக் கண்டேன்!!
கண்களால் கண்ட போதும்
கதம்பமாக மாற நினைத்தேன்- "கண்ணே"
கைகளோடு சேர்த்து
தலைமீது காவலாக வைத்து
காக்க சொல்வாயா? என்று!
இன்னும் நிகழவிருக்கும்
இந்நிகழ்வுகளை
இன்பமில்லையென்று - பொய் சொல்ல
இதயத்திற்கு வாயில்லாமல்
போய்விட்டது!!
தினமொறு வண்ணச் சேலைகளில்
நீ வருகை புரிய
வானிலென்றும் நான்
வருகைபுரிவேனடி!
வசந்தமே உனக்காக.......
இத்தனை நிகழ்வும்
"கற்பனை என்று கவிதையை முடிக்க"
கைகளுக்கு தெரியவில்லை...!
இதனை
காதல் காவியமாக படைக்க
கடவுளுக்கு விருப்பமில்லை...!!
கடவுளுக்கு
விருப்பமில்லாத போதும்
வீதியோறம் வருவேனடி
என் வெண்ணிலவே வீதி ஓரம்
உன்னை சேலையில் காண...!!!!