வாக்காளன்
கடல் கண்டிலேன்
ஆறு அறிந்திலேன்
ஏரி ஏறிப்
பார்த்ததில்லை
குளம் குதித்தறியேன்
நீந்த தெரியும்
நாலுக்கு நாலு
தொட்டி
என்றாலும்
சிறு குடுவை
ஆனாலும்
அதற்குள்ளேயே
என் வாழ்க்கை
எனக்கான
உணவு
என் எஜமானன்
கொடுப்பது
அதுவே எனக்கு
போதுமானது
நான் தான்
இம் மண்ணின்
சராசரி வாக்காளன்
நா.சே..,