கவிதை இருக்கு அதற்கு

மீண்டும் ஒரு நாள்
தந்தாய் இறைவா
நன்றி முதலில் அதற்கு

கடமை ஒன்றை
கையில் எடுத்து
கருத்தாய் முடிப்பேன் இன்று

கடமை செய்து
பலனைத் துறப்பேன்
கவலை எனக்கு எதற்கு

மனதில் மகிழ்ச்சி
நிறைத்து வைப்பேன்
கவிதை இருக்கு அதற்கு

- சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : கவிதை இருக்கு அதற்கு (19-Mar-18, 5:06 am)
பார்வை : 95

மேலே