கனவுகள் பலித்திட
இனிய கனவுகள் காண்பது
சுவையே ஆனால் நம்
சிந்தனைகள் கனவோடு
நின்றுவிட்டால் அவை
நெனவாகுவது எப்போது
கனவில் மன்னனாய்
மகுடம் சூடப்பெற்றால்
வெற்றி நாடி போகும்
மனதின் சிந்தனை
அது காட்டும் -ஆயின்
வாழ்வில் வெற்றி பெற
சிந்தனை செயலாக்கல் வேண்டும்
நாடு நலம் பெறல் வேண்டும்
வளம் பெறல் வேண்டும்
சுற்று சூழல் பசுமைப்பொங்க வேண்டும்
வறுமை ஒழிய வேண்டும்
அறியாமை ஒழியவேண்டும்
சுத்தம் சேரவேண்டும்
எல்லோரும் ஒன்றாய் வாழவேண்டும்
இவை எல்லாம் நல்ல சிந்தனைகள்
கனவிலும் இவை நல்லவையே
ஆயின் இவை நினைவாக நாட்டின்
ஒவ்வொரு இளைஞனும் மனதில்
உறுதி கொள்ளல் வேண்டும்
வாக்கில் உண்மை மட்டும் சேர்க்கவேண்டும்
சேர்ந்து உழைக்க வேண்டும்
நாடும் செழித்திடவே நலம்பெறவே