காதல் ஆசை யாரைவிட்டது

எந்தன் உயிரே உந்தன் அருகே
வாழ வேண்டும் நூறாண்டு ...
என்னை நீங்கி நீயும் நடந்தால்
நானும் போவேன் மண்ணோடு ....
பாரில் நானும் கண்டதில்லை
என்னவளே உன் போன்று...
உன்னில் நானும் என்னில் நீயும்
கலந்திருப்போம் கண்ணின் மணி போன்று ....