மலராத நினைவுகள் பாகம்2

மலராத நினைவுகள்
******************
அன்று இரவெல்லாம்
யோசித்தேன் பாலா
கூட பொறந்தவங்ளே
இப்படி இருக்காங்க
மத்தவங்க என்ன ஏதாவது கேலி பேசினா தட்டிக்கேக்க வேண்டிய இவங்களே இப்படி பேசினா நாளைக்கு என்ன கல்யாணம் பன்றவன் மட்டும் இப்படி பேச மாட்டானு என்ன உறுதி?

நான் அழகு இல்லதான் பாலா.... அது என் தப்பா ?

நானென்ன ஆசைப்பட்டா இப்படி பொறந்தேன்

அதனால எனக்கு கல்யாணமே வேண்டாம்

இனி இங்க இருக்கவும்
கூடாது. னு
முடிவு பண்ணினேன்

காலையில எல்லாரும் வெளிய போனதும்
என் துணிகள் எல்லாம் எடுத்துட்டு கிளம்பினேன்.

என் தோழியிடம் போய் நடந்ததைச் சொல்லி என்னை யாரும் இல்லனு சொல்லி ஆஸ்டலில் சேர்த்து விட சொன்னேன் முதலில் மறுத்தவள் பிறகு
சேர்த்து விட்டா

நான் இங்கு இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாமென அவளிடம் சத்தியம் வாங்கினேன்

பிறகு அம்மாவிடம் நான் ஆஸ்டலில் இருப்பதை போன் பண்ணி சொன்னேன் ஆனால் நான் இருக்கும் இடம் மட்டும் சொல்லல அம்மா திரும்பி வரும்படி அழுதா
அம்மாவ சமாதானம் செய்தேன்

இங்கிருந்து வேலைக்கு போறேன் என்ன மாதிரி சொந்தம் இருந்தும் இல்லாம போன நிறைய பேர் இங்க இருக்காங்க சந்தோஷமா இருக்கேன் பாலா .....

பாலா நான் செய்தது தப்புனா கோபம் படுங்க தயவு செய்து என் மேல இரக்கப்பட்டு பேசாதீங்க எனக்கு புடிக்காது
சரியா

சொல்லியபடி சிரித்தாள்
அந்த சிரிப்புக்குள் ஒளிந்திருக்கும் வலிகளை என்னால் உணர முடிந்தது

சரி பாலா இன்னொரு நாள் பேசுறேன் பீல் பண்ணாதிங்க சரியா
........

அவள் மனதில் இருந்த பாரத்தை என் மனதில் இறக்கி விட்டு அவள் நிம்மதியா தூங்கிட்டா

நான் தூங்கவில்லை

சுவைகளில் கூட அரும்சுவையென்று
கசப்பையும் உண்ணும் மனிதன் நிறத்தில் மட்டும் கருப்பை அவலட்சணமென்று
ஒதுக்குவதென்...???

கருமை நிறக்கண்ணா
என உருகும் இவர்கள்
சக மனிதனை வெறுப்பதேன்...???

தானே அழுது தானே
நிறுத்தும் தாயில்லா குழந்தை போல இந்த கேள்விகளுக்கும் யாரும் விடை தரப் போவதில்லை

இமை மூடாமலே விடிந்தது
என் இரவு. ..

மறுநாள் பேசினாள்

ஸாரி பாலா நேற்று
என் கஷ்டத்தைச் சொல்லி உங்களையும் கஷ்டம் படுத்திட்டேனா

அதெல்லாம் இல்ல
முதலில் உனக்குள்
இருக்கும் தாழ்வு மனப்பானமைய விடு

உலகின் நம்பர் ஒன் மாடல் யார் தெரியுமா
கேம்பல் என்ற
கருப்பின பெண்
பேருந்தில் தங்கள் பக்கத்தில் கூட உக்கார விடாத அமெரிக்காவின்
நிறவெறிய எதிர்த்து போராடி அந்த ஆதிக்கத்த உடச்சி அந்த மக்களையே ஏற்க வச்சி ஜனாதிபதி ஆன ஆபிரகாம் லிங்கன்
கருப்பு நிறம் தான்.

வாழ்க்கை உடலின் வண்ணத்தில் இல்லை
மனதின் எண்ணத்தில்
உள்ளது புரியுதா
என்றேன்
நீங்க சொன்னவங்கள
புரியல ஆனா சொன்ன விதம் பிடிச்சிருக்கு
மனசுக்கு ஆறுதலா இருக்கு
என்னையும் ஒரு மனுஷியா மதிச்சி இப்படி பேசிய முதல் ஆளு நீங்கதான்
உங்கள மாதிரி நண்பன்
இருந்தா யாருக்குமே சோகம் வராது

பாலா தினமும் உங்கட்ட ரெண்டு வார்த்தை பேசனும் அனுமதி தருவிங்களா??

தாராளமா பேசு என்றேன்
ஜ..ஜாலி குழந்தையாய்
குதூகலித்தாள்

தினமும் பேசினாள்
விலைவாசி போல
நாளுக்கு நாள் அவளின்
அன்பும் கூடியது

உனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றால்

ம் . எனக்கு 7ஜி படத்தில் நினைத்து நினைத்து பாடல் பிடிக்கும் என்றேன்
அந்த பாடலை அதே குரலில் அழகா பாடினா

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள்
உந்தன் கையில் தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை
கண்மூடி கேட்டால்
வித்தியாசம் உணர முடியாது அதே குரல்

நீ நல்லா பாடுவியா சொல்லவே இல்ல
ஏதோ பாடுவேன் என்றாள்

அடிக்கடி பாடுவா அதுவும்
உள்ளம் கையில் வெப்பம் சேர்க்கும் வரிகளை அழுத்தி பாடுவா

நீங்கள் நீயாகியது
பிறகு டேய் என்றாள்

பாலா உனக்கு எந்த நடிகை பிடிக்கும்டா

எனக்கு அஞ்சலி பிடிக்கும் நடிகை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி தோனும் அதான் பிடிக்கும் என்றேன்

உடனே கோபமா
ஏன்டா உனக்கு அவள பிடிக்குது எனக்கு அவள பிடிக்காது
சீ .. குரங்கு மாதிரி இருக்கா
இனி உனக்கு அவள பிடிக்கும்னு சொன்ன கொன்னுடுவேன்னு மிரட்டினாள்

பாலா என்ன தவிர உனக்கு யாரையும் பிடிக்க கூடாது
நா செத்தாலும் நான் வாழும் மனசுல யாரும் வரக்கூடாது அப்படி வந்தா பேயா வந்து
உன்னையும் கூட்டி போயிடுவேன் புரியுதா??

நல்லாவே புரியுது

இன்று ரொம்ப டல்லா பேசினாள்

என்னாச்சி

உடம்பு முடியலடா

ஆஸ்பிட்டல் போனியா

இல்லடா மெடிக்கலில்

மாத்திரை வாங்கி போட்டேன் இரவு சரியாகலனா நாளை ஆஸ்பிட்டல் போறேன்

மெடிக்கலில் மாத்திரை வாங்கி போடாத ஆஸ்பிட்டல் போ
சத்தம் போட்டேன்
நாளைக்கு போறேன்டா
ஒண்ணும் இல்ல விடு

சண்ட போடாம பாசமா பேசு
சரி பாலா உன் பிறந்த நாள் என்று வருது
.ஏன் கேக்க
எதுக்கு கேப்பாங்க
வாழ்த்து சொல்லதான்

அது மட்டுமல்ல
அன்னிக்கு உங்கிட்ட ஒண்ணு கேப்பேன்
நீ மறுக்க மாட்டனு
நம்புறேன்

என்ன வேணும் இப்பம் கேளு
முடியாது பிறந்த நாள் அன்று
கேட்கிறேன்

சரி கேளு இப்போது நிம்மதியா தூங்கு காலை பேசுறேன் சரியா,

ம்ம் சரிடா இணைப்பை துண்டித்தேன்
அப்போது தெரியவில்லை துண்டித்தது இணைப்பை மட்டுமல்ல என்பது

தொடரும் 2

எழுதியவர் : இ.பாலாதேவி (21-Mar-18, 10:40 am)
பார்வை : 147

மேலே