உலக கவிதை தினம்

*கருவறை இல்லாத தாய்*

உலக கவிதை தினம்...

கவிதை
உலகத்தின் மாபெரும்
சக்தி.
நாம் தான் அதை காதலுக்கு மட்டும் சொந்தமென பார்க்கிறோம்.

ஒவ்வொரு கவிஞனுக்கும்
ஒவ்வொரு கவிதையும் ஒரு
குழந்தைதான்.

அக்கவிதைக்கு தாய்,தந்தை அக்கவிஞன் தான்.

சிலருக்கு...

கவிதை
முதலிரவு இல்லாத திருமணம்.
கற்பணைக்கு பிறக்கும்
குழந்தை.
காகிதம் அதற்கு கருவறை.
பேனா அதன் தொப்பில்
கொடி.
அதன் பிரசுரம் மகளின்
திருமணம்.

எல்லாம் உண்மைதான்.

ஆனால்

கற்பனைக்கு மட்டும் பிறக்கும் குழந்தையல்ல
அது !

வலிகளில் பிறந்த குழுந்தைகள் ஏராளம்...

ஆநீதிகளில் பிறந்த
குழந்தைகள் ஏராளம்...

ஏற்றத்தாழ்வில் பிறந்த
குழந்தைகள் ஏராளம்...

காதலில் பிறந்த குழந்தைகள் ஏராளம்...

காமத்தில் பிறந்த
குழந்தைகள் ஏராளம்...

இயற்கையில் பிறந்த குழந்தைகள் ஏராளம்...

பெண்களால் ஆண்களுக்கே பிறந்த குழந்தைகள் ஏராளம்..

மனிதர்கள் உருவாக்கி குழந்தைகள் ஏராளம்.

ஒரு மங்கையை வர்ணித்து
அவள் அழகுக்கு அழகூட்டி.

அவள் முகத்தில் சிறு
புன்னகையையும்,

அவள் உள்ளத்தில் சிறு
காதலையும் ,

ஆயிரம் ரசிகர்களையும் உருவாக்குவது மட்டும்
கவிதையல்ல...

கல்லை கரைக்க முடியுமென்று கரைத்து காட்டுவது கவிதை...

ஓர் வரியில் சமூகபுரட்சி
உண்டாக்குவது கவிதை...

ஏற்றத்தாழ்வுகளை இரண்டே வரியில் அகற்றி காட்டுவது கவிதை...

இரக்கமற்றவன் கண்களில்
நீர்கசியவைப்பது கவிதை...

புல்லுக்கு நீரின்றி
தாகம்தீர்ப்பது கவிதை...

சாதாரண மனிதனை
சாதனையாளனாக்குவது
கவிதை...

போதும் என்றவனை போராளியாளனாக்குவது
கவிதை...

மாற்றத்தை உலகில்
நிகழ்த்திக்காட்டுவது
கவிதை...

மரபனுவையும் நொடியில்
மாற்றிக்காட்டுவது
கவிதை...

ஐம்புலன்களையும் அடங்க
செய்வது கவிதை...

செல்வமின்றி ஆசைதீர்த்து
காட்டுவது கவிதை...

ஏழையையும் உள்ளத்தால் பணக்காரனாய் உயர்த்தி
காட்டுவது கவிதை...

மிருகத்தையும் மனிதனாக
உருமாற்றிக்காட்டுவது
கவிதை...

இப்படி உலகையே வரிகள் மாற்ற வைப்பது கவிதை...

அந்த கவிதைகளை நீ
பெற்றெடுக்க

ஒரு கவிஞனாக இருக்க
தேவையில்லை...

இன்பம் துன்பங்களை கடந்து போகும் சாதாரண மனிதனாக இரு...

அது தான் பெரும் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியது...

இந்த உலகத்தை நேசியுங்கள்...
வாழ்க்கையை வாழுங்கள்...
கண்களால் படிக்க முயலுங்கள்...

கருவறையில்லாத தாயாக மாறுவீர்கள்...

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கவிதை தின நல்வாழ்த்துக்கள்...

✍🏻 நெய்தல் தமிழன்
இருதய ஆஸ்ட்ரோ.த

எழுதியவர் : இருதயா (21-Mar-18, 5:55 pm)
சேர்த்தது : த இருதயா
பார்வை : 159

மேலே