காதல்

அவள் கண் மலர்ந்தாள்
அவள் பார்வை
என் முகத்தில் வீச
நான் பரிதி ஒளி வீச்சில்
சந்திரன் ஆனேன் -அவள்
பார்வை என் வாழ்விற்கு
வித்தானது
அவள் செவ்வாய்த்திறந்து
முகம் மலர்ந்தாள்
சோலைக்குயிலாய் வாய்த்திறந்து
அன்பே என்றழைத்தாள்
இனிய காதல் உதயமானது
மலர்ந்தது பொற்றாமரையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Mar-18, 4:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே