உயிருள்ள வரை
காதலென்ற கங்கைநதி
கானல்நீராய் மறையுதடி..!
சாதலென்னும் புனிதத்தில்
சங்கமிக்க அலையுதடி..!
காயமில்லா வலிகள்
காலமெல்லாம் தொடருதடி...!
சாயம்போன வாழ்க்கை
சாரயத்தை தேடுதடி..!
உயிருள்ளவரை உந்தன்
நினைவுகள் வாழுமடி..!
உலத்திலதுவே எந்தன்
உறவென்று ஆகுமடி..!
பிரிவின் சுமைகளுக்கு
பிரசவம் இல்லையடி..!
பிணமாய் மாறும்வரை
என்னிதயம் சுமக்குமடி..!