கல்யாணம் ஆகாத கைம்பெண்

என்வானம் நீயென்று
எண்ணத்தில் பறந்த என்னை...
கல்யாணம் செய்யாமலே
கைம்பெண்ணாய் மாற்றியவனே...

என்னுயிர் பிரிந்த உன்னுயிர்
எப்படி வாழும் சொர்க்கத்தில்...
நினைவுகளை சுமந்துகொண்டு
நிழலாக வந்துவிட்டாய்...

கண்ணில் தெரிவது
கானலென தெரிந்தும்...
உள்ளத்தின் உணர்வுகளை
உயிரில்லா நிழலிடம் பரிமாறுகிறேன்..!

மரணத்தின் பாதையில்
மணவாளன் நீ செல்ல
மனதுக்குள் ரணங்கள்
மலையாக குவிந்ததடா..!

தனிமை மதியாக
தவிக்கும் என்னுயிர்
தற்கொலை செய்யவும் முடியவில்லை...
தவமிருந்து பெற்றவள் பாசம்
தடுப்பணையாக தடுக்குதடா..!

காதல் மரபணு
இல்லாத காலன்
கருணையின்றி தந்த வலிகள்
காலமெல்லாம் தொடருமடா...
நம் காதலை எண்ணி எண்ணி..!

ந.இராஜ்குமார்

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 7:48 pm)
பார்வை : 245

சிறந்த கவிதைகள்

மேலே