தீரா வலியாய் ஒர் பயணம்-2 மௌனத்தின் யுத்தம்

அங்கம் பதபதக்க
செங்குருதியும் துடிதுடிக்க
எங்கும் உடலெல்லாம் நடுநடுங்க
எஞ்சிந்தையும் நூல்நூலாய் பிரிந்திற்றே
இந்நங்கையின் மௌனத்திலே!

முகநிலவும் தினம் பௌர்ணமி பூப்பூத்து
நடைகொடியும் தளர்ந்திடாது
நகைபொன்னும் தேய்ந்திடாத
அழகு ரசங்களும் குறைந்திடாத
வதனமாய் வலம் வருவாள்
மங்கை இவள்!

காத்து நின்ற நொடிகளெல்லாம்
பூத்து நின்ற விழிகளுக்கு
சேர்த்து செல்வாள் பொங்கும் எரிமலைச் சாறினை
மின்னல் வேக நடையெடுத்து!

பூகம்பமும் சுனாமிகளும் போர் தோடுக்க நான்
மலர் சோலைகளும் இயற்கை சிற்பங்களுமாய் அவள்
இந்த மௌனத்தின் யுத்தத்தில்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (20-Mar-18, 7:35 pm)
பார்வை : 2161

மேலே