என் கவிதை
வார்த்தைகளின்
ஒய்யார ஊர்வலத்தில்
பின் வரிசையில்
நடந்து கொண்டிருந்தது
என் கவிதை !
நடக்க நடக்க..
களைப்படைந்து
ஒரு ஓரமாய்
உட்கார்ந்து
மூச்சி வாங்கியது
என் கவிதை...!
ஏக்கத்தோடு
ஊர்வலத்தை
வெறித்து
பார்த்துக் கொண்டிருந்தது
என் கவிதை!
தீடீரென
ஊர்வலத்தில் புகுந்து
தலை தெறிக்க
ஓடியது!
எதையோ கையில்
ஏந்திக்கொண்டு,
என்னிடம்
ஓடி வந்தது!
"என்ன இது
பைத்தியமே..
எதை கண்டு
ஊர்வலத்துக்கு நடுவே
ஓடி தொலைந்தாய்" ,
திட்டிக் கொண்டே
எட்டிப் பார்த்தேன்....
வார்த்தைகளின் ஊர்வலத்தில்
மிதி பட்டு சிதறிய
அழகியலும் ,
மனிதமும்....
கையில்
ஏந்திக்கொண்டு
நின்றது ...
என் கவிதை...!