மனம்தான் தீட்டு
வந்த வழி அறிவோம்
வந்த காரியம் முடித்து
சென்று சேருமிடம் அறியோம்?
மரணம் இயற்கை!
மொட்டு அவிழ்ந்து
மலராவதுபோல் மகளிர்
மலர்வதும் இயற்கை!
இங்கே எங்கு வந்தது
தீட்டு..!
மலர்ந்தவளிடத்தும் இல்லை...
மரணித்தவரிடத்தும் இல்லை...
உழுது விதைத்தவரின்
உழைப்பில் இல்லை...
விதைந்து விளைந்த
நெல்மணியிலும் இல்லை...
அவரவர் மனதில்
இருப்பதுதான் தீட்டு..!
உணவில் கூட தீட்டாம்
வயறு இருக்கட்டும்
பார்த்துக்கொள்ளுங்கள்
இத்தகைய எண்ணங்களால்
வாழ்விற்க்கு
சேராமல் போய்விடபோகிறது...