மத்து

மனைவி : ஏங்க!! கொஞ்சம் இந்த மூடியை திறந்து தாங்க.. இறுக்கமா மூடி இருக்கு. திறக்கவே முடியலை.

கணவன் : உனக்கு வேற வேலை இல்லை. எப்ப பாரு இதே வேலையா போச்சி.

மனைவி : இப்போ வந்து திறந்து தறீங்களா!! இல்லை பூரிக்கட்டையை எடுக்கணுமா?

கணவன் : ஹா.. ஹா.. ஹா.. பூரிக்கட்டையை நான் ஒளித்து வைச்சிட்டேனே!!!!

மனைவி : அப்படியா , இந்த மத்து இருக்கு... மண்டையிலேயே அடி விழும்.. பரவாலையா???

கணவன் : மூடியை திறந்து கொண்டே.. (இது வேற இருக்கா, அடுத்த முறை இதையும் ஒளித்து வைக்கணும்.)

மனைவி : என்ன பார்வை .. இதையும் ஒளித்து வைக்கலாம் னு திட்டம் போடுறீங்களா!!,
இங்கே கரண்டி எத்தனை இருக்கு பார்த்தீங்களா.. ஞாபகம் இருக்கட்டும்.


- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (22-Mar-18, 3:27 pm)
சேர்த்தது : vaishu
Tanglish : madthu
பார்வை : 366

சிறந்த நகைச்சுவைகள்

மேலே