மாய மர்மம்
உறங்கப்போகும்
மனிதனைப் பார்த்து
எரியத்தொடங்கிய
மெழுகுவர்த்தி சொன்னது...
"நான் எரியப்போகிறேன
எரிந்தும் நான்
சிதைந்தும் போய்விடுவேன்
என் வெளிச்சத்தில் நீ
நிம்மதியாக உறங்கு" என்று...
உறங்கிவிட்டு மனிதன் சொன்னான்...
"நான் கண்களைமூடி உறங்கினாலும்
என் கண்கள் எனக்கு
இருட்டாகத்தான் தெரிந்தது என்று...!!!