நினைவும் நீ கனவும் நீ

கடற்கரை மணலில் அழிந்து பாேனது
நீ எழுதிய பெயரும் கால் தடங்களும் மட்டுமே
எம் நினைவுகள் அல்ல
மழைச்சாரலில் குடையிருந்தும் நனைந்தாேம்
தூறல் ஓய்ந்த பின்னும் துளித்துளியாய் நினைவுகள்
கல்லூரி வாசலில் காத்திருந்தது பேருந்துக்காய் அல்ல
கால் நடையாய் கை காேர்க்க
மாெட்டை மாடியில் இரவு தனிமையில் நின்றேன்
தூக்கமின்றி அல்ல நினைவுகள் தூங்கி விடக்கூடாதென்று
பகலும் இரவும் மாறி மாறி
நினைவும் கனவும் நீயாகிறாய்