மழையும் நீயும்

சொல்லாமல் வந்த மழையை நின்று வேடிக்கை பார்க்காமல்,
நனைந்தும் திண்ணாமல்
சட்டைபையில் ஒன்றும் தலைக்கு ஒன்றுமாய் கைகொடுத்து
கால் நடக்க விடாமல் ஓடி வந்து வீடு சேர்ந்தால்
தேங்காய்ப்பூ துண்டால் தலை துவட்டி விட்டபடி கேள்வி "நின்னு வந்துருக்கலாம்ல" என்று
நின்றிருந்தால் வந்திருக்காது இவ்வருகில் உன் அன்பு உன்னித் தொடும் உந்தன் விரல்கள் மின்னல் வேகம் கொள்ளுமென்றால் மீண்டும் மறந்துவிடுகிறேன் குடையை எடுக்க....

எழுதியவர் : தினேஷ் அலங் (24-Mar-18, 11:38 am)
சேர்த்தது : Dinesh Alang
Tanglish : mazhaiyum neeyum
பார்வை : 106

மேலே