மயங்கிப் போகும்

கார் மேகமும்
கரு நிற - உன்
கூந்தலை கண்டு
கடகடவென கலைந்து
போகும்....!
சுட்டெரிக்கும் சூரியனும் - உன்
சுட்ர் விழிப் பார்வையை கண்டு
சுருண்டு சுருண்டு போகும்...!
வெட்ட வெளி வெண்ணிலவும் - உன்
அழகை கண்டு
வெள வெளுத்துப் போகும்....!
ஏழு வர்ணம் பூசிய வானவிலும் - உன்
புருவத்தை கண்டு
கலகலத்துப் போகும்....!
பறந்து திரியும் பட்டாம் பூச்சியும் - உன்
இமையைக் கண்டு படபடத்துப் போகும்....!
பூத்துக் குலுங்கும் பூக்களும் - உன்
புன்னகையைக் கண்டு
படபடவென போகும்...!
அடடே இயற்கையே
உந்தனைக் கண்டு மயங்கிப் போகும்!
நானும் உந்தனைக் கண்டுமயங்கிப் போனேன்னடியே!!!.

மயங்கிப் போனேன்னடியே!!!

நீ பார்க்க மறந்தாலும்
நீ கேட்க மறுத்தாலும்!!

நான் கூறுவேன்

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..

எழுதியவர் : கோவை.ரங்க நாதன் (24-Mar-18, 3:07 pm)
பார்வை : 97

மேலே