காதல் காவியம்

இமைகளில் துளிர்த்த காதல் கதை அல்லவே
இறைவன் படைத்த
காதல் காவியமே

இதழ்கள் பேச முயற்சிக்கவில்லையே
இருவிழிகள் அக்குறையை
தீர்க்க வந்ததே

பதட்டம் ஒருமுறையும்
குறையவில்லையே
பார்வை ஒவ்வொரு முறையும் தீண்டியதாலே

கரம் பிடித்து உலா சென்றதில்லையே
கனவில் எங்கெங்கும்
வலம் வந்ததாலே

காதலராய் என்றும் வாழ்ந்ததில்லையே
காலங்கள் நித்தம் கனியும்வரையிலே

மனங்கள் இரண்டும்
உரைக்கவில்லையே
மணநாள் நம்மை
அடையும் வரையிலே

அன்று இல்லை என்றதெல்லாம்
இன்று நித்தம்
நடக்கிறதே

என்றும் என்றென்றும்
இதுவே போதுமே

~என்றும் அன்புடன் ஷாகி💝

எழுதியவர் : ஷாகிரா பானு (24-Mar-18, 10:10 pm)
Tanglish : kaadhal kaaviyam
பார்வை : 502

மேலே