இறுதி மரியாதை

முற்றிலும் ஓர் புதிய விடியல்...🌼
நறுமணம் கமழும் என் வீட்டு முற்றம்...🌷
தோரண அலங்காரத்தில் வீட்டின் மாற்றம்...🌹
அறியா சொந்தமும் தெரியும்
வண்ணம்..👨‍👨‍👧‍👦
புதிய வனமாய் மக்களின் எண்ணம்...👥
உவகையாய் மனச்சிறு தங்கை முகம்..👧
மானிட வளமாய் என் வீட்டின் அகம்...🏘
விடையரியா நண்பனின் நிலை...😣
மனமறியும் இது அமைதியின் கலை...😊
எதிரியும் ஏகுவாய் பார்வையிட...😐
சுற்றியும் மூங்கில் சேர்ந்து நட...🌴
மங்கள வாத்தியம் ஊர் முழங்க...🎶
இன்ப நீரில் என் கண் கலங்க...😓
தாயும் எனக்கு துணையில்லை...☺
தந்தையும் இங்கெனக்கு இணையில்லை..☺
காதலி கால் கடுக்க நிற்கின்றாள்...😍
மனக்குறை இறக்கி வைக்கின்றாள்...🤗
என்னை அறியா புதிய வழி...🤔
என் தலையின் அருகே எரியும் ஒளி...🔥
முழுவாயடைத்து பார்க்கின்றேன்...🤐
முதல்முறை பெயர் மாற்றத்தால் தவிக்கின்றேன்...😯
கேட்பாரும் இல்லை...😶
இனி பார்ப்பாரும் இல்லை... ,😶ஏற்பாரும் இல்லை...😶
அழ மறுப்போரும் இல்லை...😑
பூக்கள் தூவிய என் பெரும் மரியாதை..💐💐💐
ஆம்..என் #இறுதி_மரியாதை.🍃🍃🍁😊

~சி ஹா அ கு

எழுதியவர் : ஹாருன் பாஷா (26-Mar-18, 8:35 pm)
Tanglish : iruthi mariyaathai
பார்வை : 108

மேலே