அழியாப் பேரழகி

என் சிந்தையில் துளிர்த்த எண்ணங்களை
நீயின்றி எப்படி உரைப்பேன்?

என் மெளனம் கலைத்த சொற்களை
நீயின்றி எப்படிச் சொல்வேன்?

என் ரணம் போக்கும் தாய் அவளை
நீயின்றி எப்படி அழைப்பேன்?

என் பிள்ளை துயில் கொள்ள
நீயின்றி எப்படி இசைப்பேன்?

என் உதடுகள்
உச்சரிக்கும்
தாய்மொழியே!

அழகியத்
தமிழ் மொழியே!

இவ்வுலகின்
பேரழகி நீயே!

பழமைப்பெற்ற
செந்தமிழே!
உன் புகழ் பாட
என் புலமை
போதவில்லையே..!

எழுதியவர் : கலா பாரதி (27-Mar-18, 3:15 pm)
பார்வை : 105

மேலே