அழகின் அலைவரிசை

உனக்கும் எனக்கு பல அடி
இடைவெளி,
நெருங்க நெருங்க
அதிர்வுகள் அதிகம்
என் இதயத்தில்,
நாளமெல்லாம்
ரத்த வேக சுழச்சி .

உன் அழகு
ஒளிக்கதிர்வீச்சு
என் கண்களின் ஊடே
மின்னலொளி பாய்ச்சி
இருள்மலையின் உச்சியில்
முளைத்த ஒற்றை ஒளியாய் .

உன் புன்னகை பேச்சு
என் காதின் ஊடே
உடல் நரம்புகள் எல்லாம்
வீணையின் மீட்டல் ,.
சுருதி கூட்டி
உடலெங்கும் சுரம்
வெப்பமேற்றி

கூந்தலின் வாசம்
காற்றினில் ஏறி
நாசியின் ஊடே
என் மனமெங்கும் உன் நறுமணம்.

உடல் தீண்டலும் இல்லை
எல்லை தாண்டலும் இல்லை

கண்முன்னே கடந்தோடும்
நதிபோல ,
காற்றுக்கு இசைந்தாடும்
மரம் போல ,
உன்னழகு , உன்நினைவு ,
உன்வாசம் , உன்சிரிப்பு
சாட்டிலைட் டிவி சிக்னல் போல்
என்திரையில் தெளிவான காட்ச்சிகள்.
செல்போன் சிக்னல் போல்
சூட்சமமாய் ..

எழுதியவர் : (28-Mar-18, 6:50 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 52

மேலே