அவதாரம்

பாவை உன்னை
பாவித் தொட்டால்
காளி ஆகிடு பெண்ணே..

கன்னி உன்னைக்
கொத்தும் கழுகை
பிளவு செய்திடு பெண்ணே..

காமம் கொண்டு
பாவம் செய்தால்
யாகம் செய்திடு பெண்ணே..

சித்தம் துடித்து
இரத்தம் கொதித்து
யுத்தம் செய்திடு பெண்ணே..

உன்மேல்
இச்சைக் கொண்டு
பிய்த்துத்தின்றால்
அவதாரம் எடுத்திடு
பெண்ணே..

எழுதியவர் : கலா பாரதி (28-Mar-18, 7:20 pm)
Tanglish : avatharam
பார்வை : 904

மேலே