ஒரு தேசம்

தந்திரங்களில் மட்டும்
வாழ்ந்திடும் தேசம்.
பகிர்வெணும் பெயரினில்
மூட்டைகள் திருடிவிட்டு
கைப்பை திறக்கும் தேசம்.
மதத்தால் பிரித்தவனை
விரட்டியதாய் கூறி...
ஜாதியால் பிரித்தவர்
பல்லக்கில் ஏறும் தேசம்.
அதற்கு இதுவென்றும்
இதற்கு அதுவென்றும்
கற்றலில் குமட்டி
திறமை எரித்த தேசம்.
கண்ணில் காணாதவனை
பகைவனாய் நம்பவைத்து
தன்னுள் தானே விஷம்
செலுத்திடும் தேசம்.
இனி என்றும் வராத...
ஒளி நாளையே வருமென
இருளில் சுழலும் தேசம்.
அனைத்திற்கும் மேல்
சோற்றுக்கு வக்கற்றும்
வக்கனைக்கனவில்
பல் காட்டித்திரியும்
வஞ்சனை சூது
வாதில்லா மக்கள்...
பசியை மறப்பதற்கு
தன்னில் நக்கி சுகிக்கும்
நாய்குணம் தெரிந்த
சுதந்திர மக்கள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Mar-18, 7:34 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : oru dhesam
பார்வை : 714

மேலே