ஆத்மாநாம் கவிதைகள்

பத்து வயதிருக்கும்
ஆத்மாநாம் போகையில்...
25 வயதிருக்கும்
அவரை படிக்கையில்...
படிக்கையில் மட்டும்
அவர் இருப்பது
போலவே இருக்கும்
எனினும் அவரில்லை...
தோழனோ, சிஷ்யனோ
அல்ல அவர்க்கு நான்...
அவருடன் இல்லாமல் போன
இன்னொரு மனதின்
இன்னொரு நிழலில்
இன்னொரு கூச்சல்.
தன்னுள் பிளிறி
தனக்குள் முனகி
தனையிழக்கும் கூச்சல்.
படித்ததும் அவரை
மறந்துபோனேன்
நினைவில் கொள்ள
அவர் பெயர் இருக்க...
கவிதைகள் எதற்கு?
குழந்தைகள்
தாயை தின்றன....
தாயை குடித்தன...
தாய் போனாலும்
குழந்தைகள் உண்டு...
எப்போதாவது
உணர ஸ்தம்பிப்பேன்...
பச்சை வாசனையில்
ஆத்மாநாம் கவிதைகள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Mar-18, 9:24 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 574

மேலே