என் வீடு

எல்லோரும் மழையை
பார்த்து ரசிக்கிறார்கள்
மழையோ என்னை
பார்த்து ரசிக்க
என் வீட்டு கூரையின்
ஓட்டை வழியே
வந்துவிடுகிறது
மழை மட்டுமா
பகலில் சூரியனும்
இரவில் சந்திரனும்
நட்சத்திரங்களும்
காட்சி தருகின்றன...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (29-Mar-18, 10:58 am)
Tanglish : en veedu
பார்வை : 130

மேலே