காதல்
அவளோடு அவன்
அவனோடு அவள்
உறவாடும் நாகங்கள்
இரண்டு போல்
அவன் உள்ளிழுக்கும்
சுவாசத்தில் அவள் எழிலெல்லாம்
அவளோ,
அவன் மீது கொண்ட சந்தேகங்கள்
அத்தனையும் கக்கிவிட்டு
உள்ளுக்குள் இழுக்கும் சுவாசத்தில்
அவன் மீது கொண்ட காதலையே
சுவாசிக்கிறாள்--அழகோடு காதல்
உறவாட நிலையானது உறவு