யதார்த்தம்

யதார்த்தம்
""""'''"""""""'''''''"'""

தைரியத்தை இழுத்து,பிடித்து,
இரண்டில் ஒன்று
இன்று எப்பிடியும்
சொல்லி விடவேண்டும் ""
என்ற முடிவில் அவளுடன் பேசதொடங்கவும்,
இடைமறித்து, அவனது புளிச்ச
புராணத்தை லாவகமாக பாடதொடங்கிவிட்டாள்
இளையவள்!

எதிர்பார்ப்பின் உச்சம்
ஏமாற்றத்தில் சரிந்து
போனது"

இனி பேசி பயனில்லை
என்ற சுதாகரிப்புடன்
கடைசி சந்தர்ப்பமும்
தவறிப்போனது.

எல்லாம் நன்மைக்கென்று
காலம் கடந்தும்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால்!!!

எதார்ச்சையாக கால்நூற்றாண்டு
கடந்து அவளை மீண்டும்
பார்த்தபோது அவனைப்பற்றிய விசாரிப்புக்களே
அதிகமாக இருந்தது.
எனக்கும் சலிப்பாக இருந்தது!!"

லவன் டென்மார்க்
""""""""'''"""""""''"""''""""""''''''"'"

எழுதியவர் : லவன் டென்மார்க் (29-Mar-18, 2:45 pm)
Tanglish : yadhaarththm
பார்வை : 276

மேலே