இரட்சிக்கப்பட தகுதியில்லாப் பாவிகள்

மது உண்ட போதையிலே அங்கே ஒருவன் போதனை செய்யக் கண்டவன் பேச்சிலே மயங்கி தலைவா என்று காலிலே விழுந்தான் தறுதலை.

அரசியல் உள்ள அரசியல்வாதிகள் ஒவ்வொருத்தருக்கும் இது தாங்க முகவுரை.

என்ன திட்டுனாலும், எவன் திட்டுனாலும் சூடு சுரனை என்பது எதுவும் இல்லை.
மீண்டும் மீண்டும் கொடி பிடிச்சி கட்சி என்ற பெயரில் கொடுப்பாங்க தொல்லை.

பேசி பேசியே ஆட்சியைப் பிடித்து அடிமைப்படுத்திய கூட்டமல்லவா?
அந்தக் கொழுப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

சத்தியத்தைக் கொன்றார்கள்.
சகோதரத்துவத்தைக் கொன்றார்கள்.
அன்பையும் தான் கொன்றார்கள் அதிகாரம் வெறி ஆதிக்கத்தினாலே.

வாழ்வது அனைவரும் பகுத்தறிவு கொண்ட மனிதர்கள்.
அவர்களைக் காப்பாற்ற எதற்காக காவல்துறைகள்?
பகட்டுத்தனமான பகுத்தறிவு ஒருவனை கொன்று மற்றவன் வாழவே வழிகாட்டுகிறது.

நிதமாக இருக்கும் போதே மூளையில் வேலை சரியாக இல்லை.
அதோடு போதையும் சேர உடலாடை அவிழ்வது கூட தெரியாவண்ணம் தட்டுத் தடுமாறி தரங்கெட்டு தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மிருகம் போல் புணர்ந்து வாழும் கொடிய உலகினீரே கெட்டொழிந்து போவீராக.
உங்கள் பாவங்களைத் தன் தலையில் ஏற்க பரம பிதாவால் இயலாது.
அவை அவனையே மறைத்துவிட்டன...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Mar-18, 10:09 am)
பார்வை : 1964

மேலே