அன்பின் பூமி இது
வாழ்க்கைத் துணையை விலைபேசி வாங்குவார் சூழ்ந்த உலகில் இதயங் கொண்ட அன்பை நம்பி கூட வருவார் யாரோ?
யாருமில்லை. யாருமில்லை.
நான் சொல்வது கேட்பீர்.
அன்பு கொண்ட அன்பிடம் மட்டுமே உண்மை இருக்கும்.
மற்றவை நேரம்போக்க வந்தவை.
பொழுதைப் போக்கச் சேர்ந்தவை.
பணம் இருந்தால் தான் சந்தோஷத்தை அனுபவிக்க இயலும் என்றால் உங்கள் மனதிலே பணமே சந்தோஷமாக பதிந்துள்ளது என்று அர்த்தம்.
உரிமை உரிமை என்று வாழ்வுரிமை இழந்தார் கோடி.
ஒருவனை அழிக்க ஊரே வருவார் ஒன்று கூடி.
இறைவனை பணிந்த கரங்கள் அதிகாரக் குரல்களுக்கு பணியாது.
இறைவனிடம் சமர்ப்பித்த மனம் உங்கள் பணத்திற்கு விலைக்கு வாங்க இயலாது.
போங்கடா வியாபாரிகளா?
எல்லாவற்றையும் விற்று விடுங்களடா.
கோபம் தான் அதிகரிக்கிறது உங்கள் செயல்களைப் பார்க்கையில்.
சாதி, மதங்களை ஒழிக்க இயலாத பெரியார் கடவுளை ஒழிக்கக் கிளம்பினாராம். ஆதலால் இது பெரியார் பூமியாம்.
சரித்திர கதைகட்டு மூடநம்பிக்கையாளர்களே வெளி வேஷம் போட நானும் பகுத்தறிவாதி தான் என்று விளம்பரமிடாதீர்கள்.
உங்கள் செயலே காட்டிக் கொடுத்துவிடுகிறது.
இந்தப் பூமி மனிதப் பய எவனும் தனக்கென்று உரிமை கொண்டாட முடியாத பூமி.
இந்தப் பூமி அன்பின் பூமி...