பள்ளி வாழ்க்கையின் இறுதி நாள்

இந்த நாள்

என் பள்ளி வாழ்க்கையின் இறுதி நாள்

தூக்கம் மறந்து அதிகாலை விழித்து பாடம் படித்த கடைசி நாள்

இனி பள்ளிக்கு போக வேண்டாம் என்று என் இறுதி தேர்வை எழுத சென்ற நாள்

தேர்வு எழுதும் போது நாளை முதல் கவலையின்றி தூங்கலாம் என்று என் மனம் எண்ணிய நாள்

வினாத்தாளில் இன்னும் எத்தனை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்று எண்ணாத
என் மனம்
தேர்வு முடிய இன்னும் எத்தனை விநாடிகள் உள்ளது என்று கடிகாரம் பார்த்து எண்ணிய நாள்

தேர்வு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த வேளையில்
பள்ளி வாழ்க்கைக்கும் எனக்குமான பலநாள் பந்தம் முடிந்த நாள்

வினாத்தாளை திருப்பி பார்த்த போது நான் எழுதிய பதில்கள் சரியா என்று சரிபார்க்க என் மனம் மறுத்த நாள்

தேர்வு நேரம் முடிந்த வேளையில் என் விடைத்தாளில் இறுதி முடிச்சிட்டு எனக்கும் என் பள்ளி வாழ்கைகுமான பந்தத்தை முடித்த நாள்

தேர்வு முடித்து வெளியே வந்து பார்த்த போது ஒருவரின் கரத்தை மற்றொருவர் பிடித்து மகிழ்ந்த நாள்

சுற்றி பலர் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்த போதும் மீண்டும் என் கண்களால் இந்த சிரிப்பை எப்போது காண்பேன் என்று வருந்திய நாள்

முன்தினம் வரை தேர்வு முடிந்ததும் அடுத்த தேர்விற்கு படிக்க எண்ணி உடனே வீட்டிற்கு சென்றே பலறும்
அன்று இறுதியாக ஒன்றுகூடிய நாள்

தினந்தோறும் பேசி பழகிய நண்பர்கள் கூட அன்று புதிதாய் தெரிந்த நாள்

அனைவரிடத்தும் பேச வேண்டும் என்று தவித்த வேளையில்
பேச வார்த்தைகள் கிடைக்காமல் மனம் திணறிய நாள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் ஒன்றாக நடந்து சென்ற நாள்

ஒன்றாக கரம் கோர்த்து நடந்த போது இப்பாதை இன்னும் நீளாத
என்று எங்கள் மனம் வருந்திய நாள்

ஆண் , பெண் , பிடித்தவர்கள் , பிடிக்காதவர்கள் என்று எந்த பாகுபாடின்றி நண்பர்களாக இணைந்த நாள்

அதுவரை பேசிடாத பலரும் ஒன்றாக பேசி நடந்த போது
இதுவரை இவர்களிடம் பேசாமல் தவறு செய்து விட்டேன் என்று வருந்திய நாள்

அனைவரும் எங்கள் பள்ளியை கடந்து வீட்டிற்கு சென்ற போது மீண்டும் இவர்களை இந்த சீருடையில் எப்போது பார்ப்பேன் என்று மனம் ஏங்கிய நாள்


மாணவர்களாக வந்து நண்பர்களான எங்கள் மனதில் பள்ளி நிகழ்வுகள் அனைத்தும் நினைவுகளாக மாறிய நாள்


அனைவருக்கும் விடை கூறி வீட்டிற்கு சென்று என் சீருடையை மாற்றிய போது மீண்டும் உன்னை எப்போது அணிவேன் என்று என் மனம் வருந்திய நாள்

என் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் நான் அறியாத பாடங்களை எனக்கு கற்று கொடுத்த என் பள்ளிக்கும் என்னுடன் சேர்ந்து இப்பாடங்களை என் மனதில் அழியா நினைவுகளாக மாற்றிய என் நண்பர்களுக்கும்
இந்த வரிகள் சமர்ப்பணம்

எழுதியவர் : மூர்த்தி.R (30-Mar-18, 10:48 am)
பார்வை : 1236

மேலே