சொல்லாத காதலால் சொக்கித்தான் போகிறேன்....

சொல்லத்தான் வருகிறேன்
சொல்லி விட தயங்குகிறேன்
சொல்லாத காதலால் தினம்
சொப்பனத்தில் மிதக்கிறேன்
மனமெல்லாம் மயங்குது
மதி முகம் உன்னை கண்டு
மரத்துத்தான் போகிறேன்
மன்னவன் விழி காணும் முன்
துள்ளித்தான் குதிக்கிறேன்
உன்னை கண்ட மரு நொடியில்
பாசாங்கு பண்ணாதே
பார்த்து விடு ஒரு நொடி
பக்கம் வர அவசியம் இல்லை
பார்வை மட்டும் வீசி விடு
சொல்லாத காதலால்
தினம் சொக்கித்தான் போகிறேன்..