முதல் இரவு
பூக்களின் கதம்பத்தில் புன்னகைத்த மகரங்கள் !
வரம்பில்லா வாசனையை வரித்தந்த மலரங்கள் !
இரவுநேர இம்சைகள் இன்னிசைத்த நேரங்கள் !
அன்றிரவு ! உனக்கும் எனக்கும் இருந்தது இரண்டடி தூரங்கள் !!!
கனவில் கண்ட கயல்விழியோ கருவுற்று ,
உருப்பெற்ற அந்த கனநேரங்கள் !
மனமுற்ற மலர்களாகி மனநிறைய கனவுகளுடன்
மணவறையில் அமர்ந்திருந்த அந்த இரு உருவங்கள் !!!
நால்வகை ஆசைகளும் ,நாடி துடிப்புகளும் ,
உச்சத்தில் அமர்ந்திருந்த அந்த இரவுநேரங்கள் !
பயமெனும் பக்குவமும் ,கூச்சமுள்ள குணமும்தான்
அந்தநேர இணைபிரியா நம் நண்பர்கள் !!!
உன் மௌனத்தில் பல நூறு அர்த்தங்கள் !
என் கூச்சத்தால் பல கோடிதவறுகள் !
அதை அனைத்தும் சகித்துக்கொள்ளும் உன் குணங்கள் !
ஆயுள்வரை வளமோடு வாழவேண்டும் இந்த இருமனங்கள்!!!
அறிமுகமில்லா அடைக்கலத்தை
அனைத்துக்கொள்ளும் பெண்மனமே !
ஆசைகளை பகிர்ந்து கொண்டு ஆயுள்வரை
ஆதரிக்கும் என் மனமே !!!