காதல்

துரத்திவரும் வெண்மேகமோ
என்று நினைத்தாயோ
பெண்ணே , பின் ஏன் இப்படி
ஓடுநிலாவாய் எனைக் கண்டு
திரும்பியும் பார்க்காமல் ஓடுகின்றாய்
என் மனதை உன் மனதோடு
சேர்க்க விரும்பும் நான்
உன் காதலனாய் உன் ஆயுள் வரை
உனக்கு காவலனாய் உன் காலடியில்
உன் அழகிற்கு பூஜை செய்யும்
மலராய் இருக்க பித்தாய் அலைகிறேன்
நீ அறியாயோ பெண்ணே
அந்த நிலவுபோல் ஓடாது
கொஞ்சம் நில்லு பெண்ணே
உன் பார்வையை என் பக்கம் சேர்த்திடு
என் காதலியாய் நிலைத்துவிடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Apr-18, 5:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே