மனமே ஏன் இந்த சலனம்

ஆயிரம் எண்ணங்கள் அடுக்கடுக்காய் சிந்தையில்
பதிலற்ற வினாக்களும் குழப்பமான தீர்வுகளும்
ஒரு மனம் செய் என்றால்
மறு மனம் வேண்டாம் என்கிறது
முடிவற்ற குழப்பங்களாலே தேங்கிக் கிடக்கிறது
குப்பைத் தாெட்டியாய் மனமிங்கு
மாறி மாறி சங்கடங்களால் சலித்தும் பாேகிறது
மனமாே தடுமாறி தவிக்கிறது
மனம் என்ற மந்திரச்சாவி யாருக்கும் புரிவதில்லை
ஆட்டிப் படைக்கிறது ஆசைகளை ஏவி விட்டு
மனமே ஏன் இந்த சலனம்