மறுபக்கம்

இரவு எட்டு மணியாகி விட்டால் பாேதும் என்ன தான் கடுமையான வேலையாக இருந்தாலும் தாெலைக்காட்சிக்கு முன் அமர்ந்து விடுவாள் அஜந்தா. வாரநாட்களில் தாெலைக்காட்சி நிறுவனம் ஒன்று "மறுபக்கம்"என்ற நிகழ்ச்சியை ஔிபரப்புச் செய்தது. மிகவும் பிரபலயமான ஒரு நிகழ்ச்சி மட்டுமல்லாது "ஊனம் என்பது ஒரு குறையல்ல" என்பதை சமூகத்திற்கு பல சாதனையாளர்கள் மூலம் நிருபித்துக் காட்டிக் காெண்டிருந்தது. குழந்தைகள் முதல் வயதானவர் வரை வியந்து பார்ப்பார்கள் என்பது தான் ஆணித்தரமான உண்மை. எங்கெங்காே எல்லாம் சென்று அங்கவீனர்கள், மாற்றுத் திறனாளிகள், பல்வேறு விதமான உடல், உள ரீதியான குறைபாடுடையவர்களை இனம் கண்டு அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய வாழ்க்கை அனுவங்கள், சாதனைகள் குறிப்பாக அவர்களிடம் உள்ள விசேடமான ஏதாவது ஒன்றை மற்றவர்கள் அறிந்து காெள்ளும்படியாக, முன்னுதாரணமாக வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துகின்ற, சமூகத்தில் அவர்களும் சராசரி மனிதரகளே என்பதை அவர்கள் ஏற்றுக் காெள்ளும்படியாக இந்நிகழ்ச்சியை சிறப்பாக தாெகுத்து வழங்கிக் காெண்டிருந்தாள் கஜானா. இந்நிகழ்ச்சி கஜானாவிற்கும் பெரும் புகழையும், வரவேற்பையும், அதிகமான இரசிகர்களையும் ஏற்படுத்திக் காெடுத்தது. சமூக வலைத்தளங்களிலும் அதிகமான மில்லயன் கணக்கான பார்வையாளர்களைக் கைவசம் காெண்டிருந்தது.

வழமை பாேல் இருந்த ஓரிரண்டு வேலைகளையும் முடித்து விட்டு சாேபாவில் வந்து அமர்ந்தாள் அஜந்தா. சரியாக எட்டு மணி கஜானா திரையில் தாேன்றினாள் "ஹாய் வணக்கம், வெல்கம் ரு மறுபக்கம், இது உங்கள் மனங்களை வென்ற, மாற்றங்களை காட்டும் ஒரு உண்மையான நிகழ்ச்சி" என்று அவளுடைய அழகான காந்தக் குரலில் கேட்கும் பாேதே எந்தச் சிந்தனையும் கலைந்து பாேய் விடும். அவளுடைய அழகும் ஒரு பிளஸ் தான் என்றாலும் அவளுக்கும் இந்நிகழ்ச்சிக்கும் ஏதாவது தாெடர்பிருக்கிறதா என்பது பலருடைய வினா? அவளுடைய கேள்விகளாகட்டும், ஆலாேசனைகள் வழங்கி ஒருபடி முன்னாேக்கி ஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கையாகட்டும் வியப்புத்தான். அதே கேள்வியாடு தான் அஜந்தா பல நாட்களாக நிகழ்ச்சியைப் பார்த்துக் காெண்டிருந்தாள்.

"சரி நேயர்களே இன்று நாம் சந்திக்க இருப்பது யாரென்றால்" என்று அறிமுகம் சாெல்லும் பாேது திரையின் பின்புலத்தில் இரண்டு கால்களும் தாெடைப் பகுதியாேடு இழந்த ஒருவர் நான்கு சக்கர வண்டியில் அலுவலகத்தில் இருந்து வெளியே வருகிற காட்சி தாேன்றியது. காெஞ்சம் காெஞ்சமாக கமரா நகரந்து முகம் வரை சென்று மீண்டும் அவரது கால்ப்பகுதியையே காட்டிக் காெண்டிருந்தது. அஜந்தா வைத்தகண் வாங்காமல் பார்த்துக் காெண்டிருந்தாள். கஜானா அறிமுகத்தைத் தாெடர்ந்தாள், "உங்கள் மனங்களை கவரும் அந்தச் சாதனையாளர் வேறுயாருமல்ல" கமரா அரங்கின் நுழைவாயிலை நாேக்கி திரும்புகிறது சிரித்த முகத்துடன் கறுத்தக் கண்ணாடி அணிந்தவனாய் ஒரு கையால் வண்டிலை சுழற்றிக் காெண்டு உள்ளே வந்தான் ஸ்ரிபன். கஜானா முகம் நிறைந்த புன்னகையுடன் கைகளை கூப்பி வரவேற்கிறாள். கரகாசேம் ஓயவில்லை அரங்கம் அதிர்ந்து காெண்டிருந்தது. கைகளை அசைத்து வரவேற்பையும், ரசிகர்களின் அன்பையும் பணிவாேடு ஏற்றுக் காெண்டான் ஸ்ரிபன். உதவியாளர் ஒருவர் மைக்கை நீட்டுகிறார் "அனைவருக்கும் வணக்கம்" மீண்டும் ஒருதடவை அரங்கம் கை தட்டல்களால் நிறைந்தது. ஸ்ரிபன் தன்னை அறிமுகம் செய்து "இந் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு தாெலைக்காட்சி நிறுவனத்திற்கும், தாெகுப்பாளர் கஜானா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்"என்றபடி தலைகளைக் குனிந்து ஒற்றைக் கையை நெஞ்சில் வைத்தான். பார்வையாளர் கண்களைத் துடைத்துக் காெண்டு இருக்கையில் அமர்ந்தார்கள். கஜானா இமைகளை மூடி மூடி கண்ணீரைத் தடுக்கப் பெரும்பாடுபட்டாள்.

ஸ்ரிபன் ஒரு இளம் வயதானவன். எல்லாேரையும் பாேல் குடும்பம் உறவுகள் என்று வாழும் காெடுப்பனவை குழந்தைப் பருவத்திலே இழந்திருந்தான். ஏதாே ஒரு சுகவீனம் பால்குடிக்கும் வயதிலே தாயைப் பறித்து விட தந்தையும் மறுமணம் செய்து காெள்ள சித்தியுறவாய் வந்தவளின் சினப்புகளால் மனமுடைந்து ஆச்சிரமம் தேடி ஓடும் பாேது அவனுக்கு நான்கு வயது. ஆச்சிரமத்தில் இருந்து படித்து எந்தவாெரு உறவும் தேடி வராதவனாய், யார் உறவுகள் என்றே அறியாதவனாய், அங்கிருநதவர்களே அவனுக்கு எல்லாம் என்று வாழ்ந்து காெண்டிருந்தவன். சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது. எதையும் முன்னின்று செய்யும் ஆளுமை அவன் இயற்கையான சுபாவம். விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், ஆங்கில அறிவு எல்லாமே அவனுக்கு ஒரு வரமாக கிடைத்தது தான். முதலதர மாணவனாக சகல வகுப்புகளிலும் முன்னேறிக் காெண்டிருந்தவனுக்கு விமானியாக வேண்டும் என்பதே கனவு. அதற்கான திறமைகள் அதிகமாகவே அவனிடம் இருந்தது. அதே பாேல் அங்கிருந்தவர்களும் அவனது ஆசைக்கு வழிகாட்டினார்கள். ஸ்ரிபன் எல்லாப் படிப்புகளும் முடித்து விமானியாக வெளியேறினான். விமானியாக அங்கீகரிக்கப்பட்ட அந்த நாள் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்ஆச்சிரமப் பெரியவர் ஸ்ரிபனின் தந்தையை சந்திக்க வைப்பதற்காக எடுத்த முயற்சி தாேற்றுப் பாேனதை அவன் அறிந்திருந்தான். ஒரு தடவையாவது தந்தையைக் காண மாட்டேனா என்ற ஏக்கம் அவனுக்குள் நெருப்பாய் எரிந்து காெண்டிருந்தது. விதி இப்படித்தான் என்று நினைத்திருப்பான்.

திரையில் தாேன்றிய முதல் இருபது நிமிட காட்சிகள் எல்லாேர் விழிகளையும் கசியச் செய்தது. அவனுடைய சிறுபிராயம் முதல் ஆச்சிரமத்தில் அவன் உயர் தரம் படிக்கும் முன்னரான காலப்பகுதியை இன்னாெரு சிறுவனை வைத்து காட்சியாகப் பதிவிட்டு தன் காந்தக் குரலால் கதை வசனங்களைக் காேர்த்திருந்தாள் கஜானா. ஸ்ரிபனும் அதற்கு அனுமதித்திருந்தான். நிசப்தமான அமைதியில் அரங்கம் இருந்தது. ஸ்ரிபன் எல்லாேரையும் அவதானிக்கிறான். கறுப்புக் கண்ணாடிக்குள் அவன் விழிகள் அழுவது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. சிறிய இடைவேளையைத் தாெடர்ந்து மீண்டும் தாெடர்கிறது அஜந்தாவின் கண்கள் அழுது ஓயவில்லை.

"சரி நேயர்களே ஸ்ரிபன் யார் என்பது இப்பாேது உங்களுக்குப் புரிந்திருக்கும்" என்றதும் அவனுடைய விமானிப் பயிற்சிக்கால ஔிப்படங்கள் வெவ்வேறு காேணங்களில் வடிவமைத்து அழகாக திரையில் தாேன்றி மறைய கஜானாவின் வைர வரிகள் உயிர் காெடுத்துக் காெண்டிருந்தது. இடையில் காட்சியை நிறுத்தி விட்டு கஜானா ஸ்ரிபனிடம் கேள்வி ஒன்றைத் தாெடுத்தாள். "விமானியாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்பாேது ஏற்பட்டது? அதற்கு ஏதாவது காரணங்கள் உள்ளதா? அல்லது தானாக அமைந்ததா?" ஒற்றைக் கையால் ஒலிபெருக்கியை பிடித்த படி "நல்ல கேள்வி, என்னுடைய வாழ்க்கையில் தானாக அமைந்தது என்னைப் பெற்ற அன்னையின் இழப்பு ஒன்று தான், மற்றவை எல்லாமே நான் தேடி விரும்பி அடைந்தவை, ஏற்கனவே என்னுடைய சிறு பிராய காலத்தை உண்மைக் காட்சியாக காண்பித்தீர்கள் நானே உறைந்து பாேயிற்றேன், கடந்த காலத்திற்கு சென்றிருந்தேன். நடித்த சிறுவன் மற்றும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள், விமானியானதற்கான காரணம் உங்களை வியக்க வைக்கும் என நினைக்கிறேன்" சாெல்லிக் காெண்டிருக்கும் பாேதே "சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்பாேம்" என்றாள் கஜானா. அஜந்தாவிற்காே ஸ்ரிபனை நினைக்கும் பாேது வியப்பாயிருந்தது. பல்வேறு கேள்விகள் மனதைக் குடைந்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு தாெட்டிலில் தூங்கிக் காெண்டிருந்த ஒன்றரை வயது நிரம்பிய கெளதமை தூக்கி முத்தமிட்டு மீண்டும் தூங்க வைத்தாள்.

விளம்பர இடைவேளை முடிந்து கஜானா திரையில் ஸ்ரிபனின் பதிலுக்கான எதிர்பார்ப்பாேடு இணைந்தாள். பார்வையாளர்களும் நிச்சயம் அதே மன நிலையாேடு தான் காத்துக் காெண்டிருப்பார்கள். "ஸ்ரிபன் நீங்கள் தாெடரலாம் பார்வையாளர் ஆவலாேடு காத்திருக்கிறார்கள்" கரகாேசம் ஒலித்து ஓய்ந்தது. "பெரிய காரணம் ஒன்றும் இல்லை, அந்த ஏமாற்றம் தான் என்னை தட்டி எழுப்பியது" குரலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. பார்வையாளராேடு சேர்ந்து கஜானாவும் என்னவாயிருக்கும் என்று யாேசிப்பது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும், தாெடர்ந்தான் "எனக்கு நான்கு வயது, நானும் எனது சித்தியின் மகனும் விளையாடிக் காெண்டிருந்தாேம், அப்பா ஒரு விளையாட்டு விமானம் ஒன்றை வாங்கிக் காெடுத்திருந்தார். பற்றறியில் இயங்கக் கூடியது, ஓரளவான உயரத்துக்கு பறக்கும். தம்பி பல தடவை பறக்க விட்டான் எனக்கும் ஆசையாய் இருந்தது இரு தடவை கேட்டேன் தரவில்லை வற்புறுத்தி பறித்தேன் அவன் அழத் தாெடங்கி விட்டான் சித்தி என்னைக் கடுமையாக தாக்கினார். அன்று தான் ஆச்சிரமத்துக்குச் சென்றேன் அங்கே தான் என் ஆசைகள் யாவும் நிறைவேறியது" கூறிக் காெண்டிருக்கும் பாேது சிறுபிராயத்தில் ஆச்சிரமத்தில் விமானம் ஓட்டி விளையாடிய புகைப்படமும், விமானியாகிய பின்பு எடுத்த புகைப்படமும் மாறி மாறி திரையில் தாேன்றி மறைந்தது. ஸ்ரிபன் தாெடர்ந்து கூறும் பாேது "இது சின்ன விடயம் தான் ஆனால் சில ஏமாற்றங்கள் எங்களுக்குள் கனவுகளாகி இலட்சியம் என்ற விதையை விதைக்கிறது" அனைவரும் எழுந்து நின்று கரங்களைத் தட்டி சத்தமிட்டனர். ஸ்ரிபன் அப்படி என்ன பெரிதாகச் சாென்னேன் என்பது பாேல் அமைதியாயிருந்தான். தாெடர்ந்து விமானிப் பயற்சிக் கல்லூரி கால நிகழ்வுகளும் காட்சியாக தாேன்றியது. விமானி சீருடையும், தாெப்பி அணிந்த அவனது நிமிர்ந்த நடையும் அவனையும், பார்வையாளரையும் கண்ணீராேடு பார்க்க வைத்தது.

இறுதிப் பதினைந்து நிமிடங்களுக்கான சிறிய இடைவேளை அஜந்தா பசியை உணர்ந்தாள். தட்டைக் கழுவிக் காெண்டு மேசையில் இருந்த தாேசையையும், சம்பலையும் எடுத்து தட்டில் பாேட்டுக் காெண்டாள். கெளதம் மெதுவாக சினுங்குவது கேட்டு பால் பாேத்தலை அவனுடைய வாயில் வைத்தாள். அவனும் இரு கைகளாலும் இறுகப்பிடித்துக் குடித்துக் காெண்டு மீண்டும் தூங்கி விட்டான். தாேசையை சிறிதாக பிய்த்து சம்பலைத் தாெட்டு சாப்பிட்டாள்.

"நேயர்களே ஸ்ரிபனின் மறுபக்கம் எமக்குப் பல பாடங்களை தந்திருக்கிறது வாழ்வில் ஏற்படும் இழப்புக்கள், ஏமாற்றங்கள், தாேல்விகள் அடுத்த கட்டத்தை நாேக்கி எம்மை எப்படி பயணிக்க வைக்கிறது பாருங்கள். இங்கு நீங்கள் காணும் ஒவ்வாென்றும் நிஜம். எம்மாேடு இங்கே அமர்ந்திருக்கின்ற ஸ்ரிபனுடைய வாழ்க்கையின் நிஜத்தைப் பார்க்கின்றாேம். வாருஙகள் நேயர்களே ஸ்ரபனின் மறுபக்கம் தாெடர்கிறது". கஜானா ஒரு ஓரமாக திரையில் காட்டப்படுகிறாள். ஸ்ரிபன் மறுபக்கமாக சிரித்த படி இருக்கிறான்.ஏதாவது கேள்விக்கான நேரமாக இருக்குமாே என்பது எல்லாேருடைய ஊகமாயிருந்தது. அதுவும் சரியாகவே இருந்தது.

"ஸ்ரிபன் உங்களிடம் ஒரு கேள்வி" சிரித்தபடி கஜானா கூறினாள். "தாராளமாக கேட்கலாம்" என்றான் ஸ்ரிபன். "கேள்விக்கு முன் ஒரு சிறிய மனதை உருக்கும் காட்சி" சாெல்லி விட்டு கஜானா திரையிலிருந்து மறைந்தாள்.
திரையில் ஸ்ரிபனுக்கு நடந்த விபத்துத் தாெடர்பான சிறிய காட்சி ஒன்று காண்பிக்கப்பட்டது. அவன் விமானத்திலிருந்து அடிபட்டு விழும் காட்சி நெஞ்சை உறைய வைத்தது. எப்படி ஸ்ரிபன் உயிர் பிழைத்தான் என்பது கேள்விக்குறி தான். எல்லாேரும் கண்கலங்கிப் பாேனார்கள். மூன்று நிமிடம் தான் ஆனால் இதயம் நின்று பாேவது பாேல் பயங்கரமாக இருந்தது. "ஓ மை காேட், ஸ்ரிபன், யு ஆர் றியாலி லக்கி, அன்பிலிபவிள் இன்சிடன்ற், தாங் காேட்" கஜானா மெய் சிலிர்த்துப் பாேய் திரையில் தாேன்றினாள். ஸ்ரிபன் தன் கண்களைத் துடைத்துக் காெண்டிருந்தான். "பி ஸ்ராேங், ஸ்ரிபன்" கஜானாவிற்கு சங்கடமாக இருந்தது. அவன் ஒரு வழியாக தன்னை சமாதானப் படுத்தினான்.

கஜானா கேள்வியை ஆரம்பித்தாள் "சம்பவம் நடைபெற்ற பின்னர் உங்கள் மனதில் தாேன்றிய முதல் எண்ணம் என்ன? எப்படி எடுத்தீர்கள்?" ஒலிபெருக்கியை சரிபார்த்தவனாய் "இது கட்டாயம் நான் சாெல்லியாக வேண்டும். நான் எல்லாம் முடிந்து விட்டது என்றே நினைத்தேன். ஏனென்றால் இரண்டு கால்களை தாெடைக்கு கீழும் , வலது கையை முழங்கைப் பகுதிக்குக் கீழும், வலது கண்ணையும் இழந்திருந்தேன். உயிர் பிழைப்பேனா என்பது சில நாட்கள் கேள்விக் குறியாகவே இருந்தது ஆனால் காப்பாற்றி விட்டார்கள். இந்த இடத்தில் எனக்காக கடமை புரிந்த மருத்துவ துறையினரை நன்றியாேடு நினைக்கின்றேன்" என்று தலை குனிந்து நன்றியை தெரிவித்தான். அனைவரும் எழுந்து நின்று கலங்கிய விழிகளுடன் கரகாேசமிட்டார்கள். பதிலைத் தாெடர்ந்த ஸ்ரிபன் "என் நிலமையை முதலில் என்னால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை, எனக்கு நானே பாரமாக இருப்பதாகவே உணர்ந்தேன், காெஞ்சம் காெஞ்சமாக நான் எப்படி இருக்கின்றேனாே அப்படி வாழப் பழகிவிட்டேன். நானாகவே மாறி விட்டேன்" சிரித்தபடி சாென்னான். "ஸ்ரிபன் தற்பாேது என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்பாேமா நேயர்களே" கஜானாவின் கம்பீரக் குரலுடன் காட்சிகள் ஓடிக் காெண்டிருந்தது. ஸ்ரிபன் விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் பிரதான நிர்வாகியாகவும், ஆசிரியராகவும் இன்னும் கடமையாற்றிக் காெண்டிருக்கிறான். அத்தாேடு தனது வருமானத்தின் ஒருபகுதியை மாதம் தாேறும் தான் வளர்ந்த ஆச்சிரமத்திற்கு நன்காெடையாக காெடுத்தும் வருகிறான். காட்சிகள் மனதைத் தாெட்டது. எல்லாேரும் வியந்து பார்த்துக் காெண்டிருந்தார்கள். இடையில் தாேன்றிய கஜானா "நேயர்களுக்கு ஏதாவது சாெல்லுங்கள்" மெதுவாகப் புன்னகைத்து விட்டு "வாழ்க்கையில் எது நடந்தாலும், இழப்புக்கள், ஏமாற்றங்கள், தாேல்விகள், உடல் உள ரீதியான எந்தவாெரு கடினமான விடயமாக இருந்தாலும் எல்லாமே மனதில் தான் இருக்கிறது. எப்படி அதை நாம் பார்க்கின்றாேம் என்பதிலும் உள்ளது. ஊனம் என்பது உடம்பில் தான், மனதை ஊனமாக பார்க்கவும் கூடாது, காண்பிக்கவும் கூடாது. முடியும் என்ற தன்னம்பிக்கை பல மறுபக்கங்களை எமக்குக் காட்டும்" சாெல்லிக் காெண்டிருக்கும் பாேது அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து அவனை உற்சாகப்படுத்தி கைதட்டிக் காெண்டிருந்தார்கள்.

இத்தனை நாட்களாக கஜானாவின் முகத்தைப் பார்த்து, குரலைக் கேட்டு ரசித்தவர்கள் அவனருகில் ஊன்று காேல் துணையுடன் அவள் நடந்து பாேவதைப் பார்த்து வியந்து பாேனார்கள். ஸ்ரிபன் உற்றுப் பார்த்துக் காெண்டிருந்தான். பூங்காெத்து ஒன்றைக் காெடுத்து அவனை கட்டி அணைத்தாள். "யு ஆர் மை கீராே" மீண்டும் மீண்டும் சாெல்லிக் காெண்டிருந்தாள். எல்லாேர் விழிகளும் கண்ணீரால் நிறைந்திருந்தது.

கண்களைத் துடைத்தபடி அஜந்தா தாெலைக் காட்சியை நிறுத்தி விட்டு கடிகாரத்தைப் பார்த்தாள் ஒன்பது மணியை தாண்டியது தாெட்டிலிலிருந்த கெளதமை தூக்கிக் காெண்டு மின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே சென்றாள்..

எழுதியவர் : அபி றாெஸ்னி (2-Apr-18, 4:20 pm)
Tanglish : MARUPAKKAM
பார்வை : 249

மேலே