மௌனத்தை கலைக்காதீர்கள்

மௌனம்

என் மனம் அமைதியற்ற நிலையில்
இதழ்கள் வைக்கும் ஒப்பாரியென்பதை
நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்

மௌனம்

நான் துரோகத்தின் பிடியில் சிக்கித் திணறும்
தருணங்களை மறைக்க நடத்தும் நாடகம்

மௌனம்

விவேகமின்றி விழுந்தெழுந்த என்னை
நானே தேற்றிக்கொள்ளும் ஊக்கமருந்து

மௌனம்

அவமானங்களின் அணிவகுப்பு
வெகுமானங்களின் புறக்கணிப்பு

மௌனம்

ஏமாற்றத்தில் உடைந்த ஓர் இதயத்தின்
அழுகையென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
மாற்றத்தின் உதயத்திற்கான தொழுகையென
விலகி செல்லுங்கள்

மௌனம்

முயலாமையின் வெளிப்பாடு
இயலாமையின் வெளிநடப்பு

ஆதலால் நீடிக்க விடுங்கள்

யாருமற்ற நிலையில் ஆறுதலை தேடும்
அவஸ்தையை நீங்கள் அறிந்திருந்தீர்களானால்
என் மௌனத்தை கலைக்காதீர்கள்!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (3-Apr-18, 7:51 am)
பார்வை : 2039

மேலே