காதல் உணர்வு
விடியற்காலை பொழுது
சில்லென்ற காற்று
பனி படர்ந்த வெண்மை
நானும் அவளும்
அருகே அருகே
அவள் கூந்தலின் அசைவும்
காதோரம் சேர்க்கும் விரல்களும்
விழிகள் பேசிய வார்த்தைகள்
அவளின் இதழ்களுள் மௌனம்
இடைவிடாத நெருக்கம்
என்னுள் ஏனோ மயக்கம்
நான் அவள் கைகளை பிடிக்க
அவள் சொன்ன வார்த்தை
நீடிக்கட்டும் இந்த வாழ்க்கை
என்றென்றும்...